2500 தியேட்டர்களில் உலகெங்கும் வெளியாகத் தயாராகும் தி லெஜெண்ட்!

தி லெஜெண்ட் படம் வருகிற ஜூலை 28ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் சுமார் 2500 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

2500 தியேட்டர்களில் உலகெங்கும் வெளியாகத் தயாராகும் தி லெஜெண்ட்!

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில், தி லெஜெண்ட் சரவணா நடிக்கும், தி லெஜெண்ட் படத்தின் வெளியீடு தற்போது நெருங்கி வருகிறது. ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாக்யுள்ல இந்த படத்தினை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியிட இருக்கும் நிலையில், படத்தினை உலக்ம் முழுவதும் சுமார் 2500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடத் தயாராகி வருவதாகப் படக்குழுவினர் தகவல் வெளியிட்டதை ஒட்டி, படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

Legend Saravanan confirms his second film at 'The Legend' audio launch |  Tamil Movie News - Times of India

இந்த படம் தான் மறைந்த நடிகர் விவேக்கிற்கு இறுதி படமாக அமைந்த நிலையில், அவருடன், பிரபு, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், விஜயகுமார், போன்ற பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ் ட்ரெயிலர் மே 29ம் தேதி வெளியாகிய நிலையில், தமிழ் பட ரசிகர்கள் பலரும் பல வகையான நல்ல கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த படத்தின் மாசான பாடல்களை, 90’ஸ் கிட்சின் மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கியிருக்கிறார். மேலும், வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் போன்ற பிரபல பாடலாசிரியர்கள் தான் இந்த படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, நடன இயக்குனர்களாக, ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் போன்றவர்களும், ஸ்டண்ட்சுக்கு அனல் அரசும் இணைந்து, பிரம்மாண்ட படக்குழு கொண்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறார் தி லெஜெண்ட் சரவண அருள்.

Bollywood Actress Urvasi Rautela paring with Legend Saravana!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெயிலரை நடிகை தமன்னா வெளியிட்ட நிலையில், படத்தின் இந்தி உரிமத்தை நம்பி ராஜனின் கணேஷ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றது. , இந்த படத்தில், ஒரு சிறப்பு பாடலில் ஆடிய நிலையில், படத்தின் கன்னட ட்ரெயிலரை நடிகை ராய் லக்ஷ்மி வெளியிட்டார்.

இந்திய படங்களில் பல தற்போது பான் இந்தியா படங்களாக உருவாகி வரும் நிலையில், பாகுபலி 2, கேஜிஎஃப்2, ஆர் ஆர் ஆர், விக்ரம் போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே உலகளவில் பல தியேட்டர்களில் வெளியானது. அந்த வரிசையில், தற்போது தனது முதல் படம் தி லெஜெண்ட் மூலமாக இணைந்து திரையுலகைக் கலக்கத் தயாராகி வருகிறார் தி லெஜெண்ட் சரவணன். ஜூலை 28ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகுமிந்த படத்திற்காக் ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.

Saravanan's The Legend#8217; Movie To Release On July 28th Worldwide - Jd  Jerry, Nasser, July, Saravanan, Sri Lakshmi, Legend, Tirupati Prasad,  Urvashi Rautela, Vivek, Yog Babu