சூர்யாவின் 40-வது பட போஸ்டர் சாதனை 10 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்..

ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் என எதிர்பார்ப்பு..!

சூர்யாவின் 40-வது பட போஸ்டர் சாதனை  10 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்..

நடிகர் சூர்யாவின் 40-வது பட மோஷன் போஸ்ட்ரை வெளியிட்ட 10 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் கடைசிப் படமான சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், இதுவரை பார்த்திராத சூர்யா நம் கண் முன் தோன்றினார். இந்தப் படத்திற்கு பல சர்ச்சைகள் எழுந்தாலும், ரசிகர்களிடம் சாதகமான விமர்சனங்களையே பெற்றது. 

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ஆந்தாலஜி படமான நவரசா, என்ற படத்தில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் கதையில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் என்ற படத்திலும் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

வாடிவாசலை தொடர்ந்து சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி 22-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதற்கு முன்னதாக ஒரு சிறிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், இந்த போஸ்டர் வெளியான 10 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

சூர்யா இரும்பு சங்கிலியை கையில் வைத்துக் கொண்டு ஒரு இருட்டான இடத்தில் நிற்பது போன்று போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், நிச்சயம் இப்படம் ஒரு ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன், பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.