வடிவேலு இல்லாத சுந்தரா டிராவல்ஸ்-2..! யோகிபாபு, கருணாகரன் நடிக்கவிருப்பதாக தகவல்..!

வடிவேலு இல்லாத சுந்தரா டிராவல்ஸ் எப்படி இருக்கும்?

வடிவேலு இல்லாத சுந்தரா டிராவல்ஸ்-2..! யோகிபாபு, கருணாகரன் நடிக்கவிருப்பதாக தகவல்..!

2002-ம் ஆண்டு முரளி, வடிவேலு இணைந்த நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தப் படம் சுந்தரா டிராவல்ஸ். இரண்டு இளைஞர்கள் சேர்ந்து ஒரு ஓட்டை பேருந்தை புதிதாக மாற்றுவதற்காக படும் பாட்டையும், இடையில் காதலையும் நுழைத்து முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியிருந்தது சுந்தரா டிராவல்ஸ். அதுவரை வெளிவந்த காமெடி படங்களில் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது, வசூலை வாரி குவித்தது இப்படம். ராதா, பி.வாசு, விணு சக்ரவர்த்தி, மணிவண்னன், இளவரசு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். 

படத்தில் இருந்த ஒரு ஒரு காமெடி சீனுக்கும் தியேட்டர்களில் விசில்களும், கைத்தட்டல்களும் அனல் பறந்தன. முரளியும், வடிவேலும் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மேலும் புகழடைந்தனர். 19 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. 

நடிகர் முரளி காலமாகிவிட்ட நிலையில், அவரது கதாபாத்திரத்தில் கருணாகரனும், வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே 'ட்ரிப்' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.