கிறிஸ்துமஸ்-க்கு வெளியாகும் ''டான்?'' இறுதிகட்ட படப்பிடிப்பில் படக்குழு மும்முரம்..!

இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரம்..!

கிறிஸ்துமஸ்-க்கு வெளியாகும் ''டான்?'' இறுதிகட்ட படப்பிடிப்பில் படக்குழு மும்முரம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் படத்தை கிறிஸ்துமஸ்-க்கு வெளியிட படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் நுழைந்த குறைந்த வருடங்களிலேயே முன்னணி நடிகர் இடத்தைப் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக, மெமிகிரி ஆர்டிஸ்டாக வாழ்க்கையை துவங்கியவர் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் இடத்தில் உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை தராவிட்டாலும் சொல்லும் அளவிற்கு அனைவராலும் பேசப்பட்டது. அடுத்ததாக இவர் நடிப்பில் டாக்டர் படம் உருவாகி ரிலீசுக்காக வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது புதுமுக இயக்குநர் சிபி.சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கும் சிவகார்த்திகேயன் இதற்காக தனது எடையை குறைத்துள்ளார். 

இப்படத்தில் நடிகர் சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடெக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் டான் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்து, பின்னணி வேலைகளை விறுவிறுவென முடித்து டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.