வெட்கமே இல்லையா.? பொது இடத்தில இப்படியா இருப்பது,.!ஸ்ருதிஹாசனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! 

வெட்கமே இல்லையா.? பொது இடத்தில இப்படியா இருப்பது,.!ஸ்ருதிஹாசனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! 

பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகளாகிய ஸ்ருதிஹாசன், சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். தன் காதலரோடு நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதை உறுதி செய்தார். 

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் வெளியிட்டிருக்கும் போட்டோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  மும்பையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எடுக்கப்பட்ட அந்த போட்டோவில் ஒரு காலை தூக்கியப்படி தனது காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் காதலர் என்றாலும் பலர் கூடும் பொது வெளியில் இப்படியா கட்டிப்பிடித்து இருப்பது என்று விளாசி வருகின்றனர். ஆனால், சிலரோ இந்த  போட்டோக்களை பார்த்து மிக அழகாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை முதலில் காதலித்து வந்தார். பின்னர் இவ்ர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் நாங்கள் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.