முதுகை காட்டி அன்பு கட்டளையிட்ட ஷ்ருதி.. சொன்னதை செய்த ரசிகர்கள் 

முதுகை காட்டி அன்பு கட்டளையிட்ட ஷ்ருதி.. சொன்னதை செய்த ரசிகர்கள் 

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், 'சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். 

நடிப்பு, நடனம், பாடகி என பன்முக திறமைக்கொண்டவர் ஸ்ருதிஹாசன். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். 

இதற்கிடையே தனது சமீபத்திய பதிவில், ஸ்ருதி ஹாசன் தனது முதுகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனின் முதுகில் 'ஷ்ருதி' என எழுதப்பட்டுள்ளது. 

அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர், என் பெயரைச் சொல்லுங்கள்-சத்தமாகச் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அன்பை அள்ளி தெளித்து வருகின்றனர்.