விவாகரத்துக்கு பின் விவகாரமான படங்களில் சமந்தா.. இருபாலின ஈர்ப்புடைய தமிழ் பெண்ணாக நடிக்கிறாரா?

விவாகரத்துக்கு பின் விவகாரமான படங்களில் சமந்தா.. இருபாலின ஈர்ப்புடைய தமிழ் பெண்ணாக நடிக்கிறாரா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா.  ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமாகி நீ தானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, தங்கமகன், தெறி போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார்.

அதனை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்கு ரீமேகில் நடித்து தொடர்ச்சியாக பிரிந்தவனம், டோக்குடு, நான் ஈ போன்ற பல திரைப்படங்களின் தொடர் வெற்றியின் மூலம் தெலுங்கிலும் உச்ச நட்சத்திரமாக வளம் வந்தார். பின்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யா உடனான தனது விவகாரத்தை அறிவித்தார். 

கடந்த சில வருடங்களில் வெளிவந்த ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2வில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அகில இந்திய நட்சத்திரம் என்ற அந்தஸ்தை அவருக்கு வழங்கியுள்ளது . தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் டீரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் புதிய இணைப்பாக உலகப் புகழ் பெற்ற இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் ஒரு புதிய பிரிட்டிஷ் படத்தில் டிடெக்டிவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்த படம்  இந்திய எழுத்தாளர் டைமேரி N . முராரியின் 2004இல் வெளியாகி அதிகம் விற்பனையான ‘Arrangements of Love’ என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்படவுள்ளது. 
இப்படத்தில் சமந்தா Bi Sexual கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளதாகவும் அதற்கு  படத்திற்கு அரெண்ஜ்மெண்ட் ஆஃப் லவ் என பெயரிடப்பட்டு உள்ளது என சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார், அதில் “ஒரு புதிய உலகம் நான் கடைசியாக 2009 ஆம் ஆண்டு யே மாயா சேசேவுக்காக ஆடிஷன் செய்தேன்.

அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆடிஷன் செய்தபோது நான் அதே பதட்டத்தை உணர்ந்தேன்... BAFTA விருது பெற்ற, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, உங்களுக்கு மிகவும் பிடித்த தொடரான 'Downton Abbey'-ன் இயக்குனருக்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதில் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறேன் சார். #PhilipJohn வாய்ப்புக்கு நன்றி @sunitha.tati @gurufilms1... இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது!!!" என குறிப்பிடப்பட்டுள்ளார்.

திருமணத்தில் ஏற்பட்ட விரிசலின் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகி நடிப்பதற்கு சற்று இடைவேளை விடுவார் என்று பலர் எதிர்பார்த்து இருந்த நிலையில, தன் வளர்ச்சியில் மட்டுமே முழுகவனம் செலுத்தி  இந்திய சினிமாவிலிருந்து உலக சினமா லெவெலுக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சமந்தா.