ப்ரபோஸ் செய்யுமாறு அழைப்பு விடுத்த ராஷ்மிகா..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

ப்ரபோஸ் செய்யுமாறு ரசிகர்களுக்கு ராஷ்மிகா அழைப்பு..!

ப்ரபோஸ் செய்யுமாறு அழைப்பு விடுத்த ராஷ்மிகா..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்கு ப்ரபோஸ் பன்னும் படி தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

2016-ம் ஆண்டு கன்னடத்தில் ’கிரிக் பார்ட்டி’ என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு 2018-ம் ஆண்டு தெலுங்கில் ’சலோ’ மற்றும் ’கீதா கோவிந்தம்’ என்னும் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடத்து தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனின் ’எஸ்.கே, டியர் காம்ரேட் ’ படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ள ராஷ்மிகா, பொதுவாக இணையதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். 

தனது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் கம்மெண்ட்ஸ்க்கு சாதுரியமாக பதிலளித்து அசத்துவது இவரது தனி சிறப்பு. அந்த வகையில் இணையதளத்தில், ரசிகர் ஒருவர் ”உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்” என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, தன்னை மென்மையாக ப்ரபோஸ் செய்து வீடியோ அனுப்பும் படி கூறியுள்ளார். இந்நேரம் பலரும் செல்போனில் வீடியோ எடுக்கத் துவங்கியிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.