நண்பர்களுடன் ரஜினி..! யுஎஸ்ஏ-வில் சூப்பர் ஸ்டார்..!

நண்பர்களுடன் ரஜினி..! யுஎஸ்ஏ-வில் சூப்பர் ஸ்டார்..!

வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் உற்சாகமாக நடமாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நீண்ட போராட்டத்திற்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த நிலையில், வழக்கமான தனது உடல்நிலைப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் கடந்த 19-ம் தேதி அமெரிக்காவுக்கு பறந்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு பிறகு அமெரிக்காவில் மகளுடன் வெளியே நடந்து செல்லும் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த வகையில் தற்போது தனது நண்பர்களுடன் அவர் கலந்துரையாடும் புகைப்படங்கள் வெளியாகி பரவி வருகிறது.

முழு உடல்நலத்துடன் இருப்பதாக கூறியுள்ள மருத்துவர்கள் இனி 5 வருடங்களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்ய தேவையில்லை எனக் கூறியதால், ரஜினிகாந்த் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ரஜினி தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொடுத்த நண்பர்களுடன் தற்போது அவர் என்ஜாய் செய்து வருகிறார். ஜூலை இரண்டாவது வாரம் அவர் சென்னை திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.