ஒரு ஹீரோ, 7 ஹீரோயின்!! ரெயின்போ படத்தில் பிக் பாஸ் பிரபலம் அறிமுகம்:

பிக் பாஸ் என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிரூப் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஏழு ஹீரோயின்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஒரு ஹீரோ, 7 ஹீரோயின்!! ரெயின்போ படத்தில் பிக் பாஸ் பிரபலம் அறிமுகம்:

S. P. ஹோசிமின் தயாரிப்பில், "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் “ரெயின்போ” என்ற படத்தில் நடிக்கிறார். வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’  மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின்  புரொடக்சன்ஸ்’ இணைந்து  தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது.

தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள S. P. ஹோசிமின் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர், பரத் நடித்த பிப்ரவரி 14  , சாந்தனு பாக்யராஜ் , சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு போன்ற சில நல்ல திரைப்படங்களை இயக்கியவர்.

மேலும், சுமோ படத்தில் இவரது இயக்கத்தில் ஜப்பான் சுமோ யோஷினோ தாஷீரோ (Yoshinori Tashiro), மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு , VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படமான "சுமோ" விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், அவரது தயாரீபில் உருவாக இருக்கும் இந்த “ரெயின்போ” படத்தில் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் வானவில் தான் பிரதான கதாபாத்திரமாக வருவதால், படத்தின் தலைப்பும் அதுவாகவே இருக்கிறது.

இதில், சிம்ரன் ராஜ் உட்பட, ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகத் தகவ்ல்கள் கூறுகின்றன. மேலும், மைம் கோபி, மனோபாலா, சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் கூட இந்த படத்தில் இணைந்துள்ள இந்த படம், பிரம்மாண்ட பொருட்செலவில் பரபரப்பான திரைக்கதையில் FANTASY COMEDY படமாக உருவாகி வருகிறது .

இன்று படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இயக்குனர்கள் ஆர்.ரவிக்குமார், ஆர். மாதேஷ், ஜப்பான் தொழிலதிபர் குறிஞ்சி செல்வன், பிக்பாஸ் புகழ் அபினய், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.+

சுமோ படத்தின் இயக்குனர் S. P. ஹோசிமின் - இடம் உதவி இயக்குனராக இருந்த விவேக் கைபா பட்டாபிராம் இந்த படத்தை இயக்குகிறார். இதற்கு ஒளிப்பதிவாளர் வினோத் குமார்,  இசையமைப்பாளர் சுபாஷ் ஆனந்த், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன். இவர்களது கூட்டணியில் படப்பிடிப்பு இனிதே ஆரம்பித்தது.
குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக உருவாகுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.