புதுப்பேட்டையா? ஆயிரத்தில் ஒருவனா? - செல்வராகவனின் பதிலைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம்!! 

நீண்ட இடைவெளிக்கு பின்னதாக இயக்குனர் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நானே வருவேன். 

புதுப்பேட்டையா? ஆயிரத்தில் ஒருவனா? - செல்வராகவனின் பதிலைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம்!! 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரானவர் தான் இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்ற புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய 2 திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கேள்விக் கேட்டு காத்து வருகின்றனர். 

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலில் புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கப்படும், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் 2 தயாராகும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.