135 குழந்தைகள் முன்னிலையில் 37ஆவது திருமணம் செய்து கொண்ட தாத்தா...

135 குழந்தைகள் முன்னிலையில் 37ஆவது திருமணம் செய்து கொண்ட தாத்தா...

135 குழந்தைகள் மற்றும் 126 பேரகுழந்தைகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்து கொள்ளும் ல்  ’தாத்தாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


திருமணம் என்பது தற்போது 90 கிட்ஸ்களுக்கு  கனவாக இருந்து வருகிறது. மேலும் இளைஞர்களுக்கு திருமணம் செய்வதற்கு பெண் கிடைப்பது என்பது ஒரு அரிதானதாக இருந்து வரும் நிலையில், தற்போது எங்கு நடைபெற்றது என்று ஒரு தகவலும் குறிப்பிடாமல் தாதாவுக்கு திருமணம் நடைபெறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தாத்தாவின் 28 மனைவிகளும் தற்போது உயிருடன் உள்ள நிலையில் அவர்கள் முன்னிலையிலயே 37 ஆவது திருமணத்தை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த திருமணத்தில் இவரது, 126 பேரக்குழந்தைகளும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் 28 மனைவிகளும் திருமணம் செய்து கொண்ட அந்த இளம்பெண்ணை உற்சாகமாக வரவேற்கின்றனர்.

இந்த திருமண வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் தைரியமான மனிதர். 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்" என குறிப்பிட்டுள்ளார்.இந்த திருமணம் வீடீயோ தற்போது சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

https://twitter.com/i/status/1401470572245131267