நீயா அவர வச்சு படம் எடுக்க போற?- விக்கியை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் சமீபத்திய பதிவைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

நீயா அவர வச்சு படம் எடுக்க போற?- விக்கியை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயந்தாராவுடன் 6 வருடம் லிவின்-இல் இருந்த விக்கி, வெகு விமர்சையாக பல நட்சத்திரங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து, அவரது பதிவுகள் முன்பை விட மிகவும் அதிக கவனத்தை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 12 30 மணி அளவில், ஒரு பதிவை விக்கி போட்டிருக்கிறார். ஆனால், அந்த பதிவானது பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை ஒட்டி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தந்தை மகள் இணையத்தில் வைரலாகினர். தனது மனைவியை விட குறைவாக சம்பாதிக்கும் கணவர் படும் கவலைகள் குறித்து பேசிய தந்தை, தனது அப்பாவி தனத்தை மிக அழகாக வெளிப்படுத்தினார்.

பின், தனது மகள் தன்னை விட்டு தாய் பக்கம் செல்வதாக வருந்திய நிலையில், அவரது மகள் தனது தந்தை ஒரு ஹீரோ என கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த தந்தைக்கும், மகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்களது வீடியோவும் பெரிதாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது கருத்துகளைப் பதிவிட்டார்.

அந்த தனியார் தொலைக்காட்சியின் வீடியோவைப் பகிர்ந்து, “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தன்று” என பதிவிட்டிருந்தார். இது பல வகையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தந்தை மகள் பாசத்திற்கு அடையாளமாக அமைந்த “தங்க மீன்கள்” படத்தில் வரும் ஒரு பிரபல வசனம், “மகளைப் பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று” என்ற வசனம். இது உண்மையில் “சேர்ந்தன்று” என்றே வரும். அது பலருக்கு புரியாத காரணத்தால், சேர்ந்தது இல்லை என நடிகர் மற்றும் இயக்குனர் ராம் அந்த படத்தின் வசனமாக வைத்திருப்பார்.

இந்நிலையில், இந்த வசனத்தின் உண்மையான வார்த்தைகளை அப்படியே பதிவாக போட்டிருந்த விக்னேஷ் சிவனின் பதிவைப் படித்து விட்டு, பல நெட்டின்கள், மோசமாக கேலி செய்து வருகின்றனர். அவரது பதிவில், சேர்ந்தன்று என தான் பதிவிட்டிருந்தார். ஆனால், பலரும், அதனை, “சேர்ந்தது + என்று = சேர்ந்ததென்று” என படித்து விட்டு, அவரது தமிழை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

அஜித் குமாரின் ஏகே 62 படத்தை இயக்க இருக்கும் நிலையில், விக்கியை, “நீயெல்லாம் அவரை வைத்து படம் பன்னால் என்ன ஆகும்?” என்றெல்லாம் ஒரு சில நெட்டிசன்கள் தவறான புரிதலோடு கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர், சேர்ந்தது இல்லை ப்ரோ!!! என அவரைத் திருத்தும் வகையில் எல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால், தமிழை நன்கு அறிந்த நெட்டிசன்கள், அந்த கமெண்ட் செய்த நபர்களுக்கு, “தமிழ் தெரியாதா?” என கேள்வி எழுப்பி, தமிழ் கற்றுத் தருகின்றனர். அவரது பதிவினை மறுபகிர்வு செய்து, “சேர்ந்தது + என்று = சேர்ந்ததென்று | சேர்ந்தது + அன்று = சேர்ந்தன்று. Correct thana??” என கமெண்ட் செய்து, அடைப்படை தமிழைக் கற்றுத் தந்து வருகின்றனர்.

இப்பதிவினால், நெட்டிசன்களுக்கு இடையில் அந்த தனியார் நிகழ்ச்சியை விட பெரும் விவாதம் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம்!!!