ஸ்டண்ட் காட்சிகளை செய்து அசத்தல்...ஹிட் ஹாட் ட்ரெண்டாகும் சிறுவர்கள்!!

ஸ்டண்ட் காட்சிகளை செய்து அசத்தல்...ஹிட் ஹாட் ட்ரெண்டாகும் சிறுவர்கள்!!

தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யானின் ‘வக்கீல் சாப்’பில் இடம்பெற்ற சண்டைக்காட்சியை அப்படியே பிரபலிக்க செய்து சிறுவர்கள் சிலர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த சிறுவர்கள் தான் இத்தகைய முயற்சியை செய்து இணையத்தில்  ஹிட் ஹாட் டிரெண்டாகி வருகின்றனர். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், தினக்கூலியை மட்டுமே நம்பி வாழ்வை நகர்த்திக்கொண்டுடிருக்கும் எளிய சிறுவர்களின் உருவாக்கத்தில் உருவான அந்த வீடியோ, தற்போது சினிமாக்காரர்களையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.  

மீன் வியாபர தொழிலில் ஈடுபடும் இந்த சிறுவர்கள், இந்த லாக்டவுன் காலத்தில் சும்மா இருப்பதை விரும்பாமல் ஏதாவது ஒரு வகையில் குடும்பத்திற்கு உதவும் நோக்கில், இந்த வீடியோவை பதிவு செய்து உள்ளனர்.  பெரிய தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி, தாங்களாகவே அசத்தலாக படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சியினை மறு உருவாக்கம் செய்திருந்தது பார்ப்போரையும் பாராட்ட வைக்கிறது.