சிவகாமி தேவியாக மாறும் நயன்தாரா..! ரூ.200கோடியில் தயாராகும் பாகுபலி வெப் தொடர்..!

சமந்தா விட்டதை பிடித்த நயன்தாரா..!
சிவகாமி தேவியாக மாறும் நயன்தாரா..!  ரூ.200கோடியில் தயாராகும் பாகுபலி வெப் தொடர்..!
Published on
Updated on
2 min read

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாகுபலி வெப் தொடரில் சிவகாமி தேவியாக நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நடிகை நயன்தாரா நடிப்பில் அண்ணாத்த, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், அடுத்ததாக அவர் வெப் சீரிஸிலும் களமிறங்கவுள்ளார். கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய மெகா ஹிட் ஆன திரைப்படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இரண்டு பாகங்களாக உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியான பாகுபலி, உலகளவில் கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தில் அனைவராலும் மிகுந்த வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் என்றால் அது சிவகாமி தேவி. இந்த கதாபாத்திரத்தில் மிகவும் கனகச்சிதமாக ரம்யாகிருஷ்ணன் நடித்திருப்பார்.

தற்போது சிவகாமி தேவியின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்க தயாராகி வருகிறார் ராஜமௌலி. இதில் சிறுவயது சிவகாமி தேவியாக நடிக்க முதலில் சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அவர் நிராகரித்ததை அடுத்து நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இதனை LetsOTT GLOBAL நிறுவனம் தனது ட்விட்டர் வாயிலாக உறுதிபடுத்தியுள்ளது. ரூ.200கோடியில் உருவாகும் இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதன் மூலம் வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த நயன் ஓடிடியில் காலடி எடுத்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com