மேரேஜ் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்... கல்யாணம் எப்போது தெரியுமா..? 

நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்தி இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார்.

மேரேஜ் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்... கல்யாணம் எப்போது தெரியுமா..? 

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. 'நானும் ரெளடி தான்' படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.

தமிழ் சினிமா உலகின் பரபரப்பான காதல் ஜோடியாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் வலம் வருகிறார்கள். இந்த காதல் ஜோடிகளின் புகைப்படம் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். நயன்தாரா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சண்டே கேள்வி நேரம்.. என்ற கேப்ஷனில் சாட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர், எப்பத்தான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்க போறீங்க. ஆவலுடன் காத்திருக்கேன்' எனக் கேள்வி கேட்டார். 

அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், ரொம்ப செலவாகும் ப்ரோ.. கல்யாணம் மற்ற விஷயங்களுக்கு. அதனால் கல்யாணத்துக்காக காசு சேர்த்துட்டு இருக்கேன். கொரோனா முடியட்டும்னு காத்திருக்கேன் என்றார். கொரோனா முடிந்ததும் நயன் - விக்னேஷ் சிவனுக்கு திருமணமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் அந்த சாட் செக்சனில், உங்களுக்கு பிடித்த இடம் எது என ரசிகர் கேள்வி கேட்க நயன்தாரா இருக்கும் இடம் எதுவானாலும் எனக்கு பிடிக்கும் என பதிலளித்துள்ளார்.