"உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருப்பேன்" வெளியானது மாமன்னன் டீசர்!

"உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருப்பேன்" வெளியானது மாமன்னன் டீசர்!

மாமன்னன் திரைப்படத்தின் டீசர் சற்று முன்னர் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

சாதிய பாகுபாடுகளை குறித்து கேள்வி எழுப்பும் விதமாக பரயேறும் பெருமாள் கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவரின் 3வது படமாக மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறுபட்ட முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகரும் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படத்தில் தமிழில் நடித்தவருமான பகத் பாசில் இப்படத்தில் வில்லனாகவும், கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். 

இப்படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் முன்னோட்டமானது இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது. 3 நிமிடம் ஓடக் கூடிய இந்த டீசர் வடிவேலுவின் அமைதியான வசனத்துடன் தொடங்கி வடிவேலு மற்றும் உதயநிதியின்  அதிரடியான தோற்றத்துடன் நிறைவடைகிறது. உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருப்பேன் போன்ற வசனங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. 

நடிகர் உதயநிதியின் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் தான் தனது இறுதி திரைப்படம் என முன்னதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். 2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது விளையாட்டு மற்றும் மனிதவள மேம்பாடு துறை மற்றும்  அமைச்சராக உள்ளது குறிப்பிடத் தக்கது.