அப்பாவும், அம்மாவும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.! ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.! 

அப்பாவும், அம்மாவும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.! ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.! 

நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா இருவரும் கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 16 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்வு கடந்த 2004ல் முடிவு வந்தது. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் தனது தாய் மற்றும் தந்தையின் விவாகரத்து பற்றி பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறும்போது, எனது அம்மா மற்றும் அப்பா பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே என்றும், இருவர் இணைந்து வாழ முடியாதபோது ஏதோ ஒரு காரணத்திற்காக இணைந்து இருப்பது தேவையற்றது என்றும் கூறியுள்ளார். 

மேலும் அவர்கள் இருவரும் தனியாக பிரிந்தபிறகு, மிகவும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், சேர்ந்து வாழ்ந்தபோது அவர்கள் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதனால் அவர்கள் விவகாரத்து பெற்றதற்காக தான் மிகவும் உற்சாகமாக எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.