கைதி-2 கண்டிப்பா வருதாமே.. இயக்குநரே வாய்திறக்கல..ஆனால் இவரு உண்மையை உடச்சுட்டாரே..!

லோகேஷ் கனகராஜ் அமைதியாக இருக்கும் நிலையில், கார்த்தி போட்டுடைத்த ரகசியம்..!

கைதி-2 கண்டிப்பா வருதாமே.. இயக்குநரே வாய்திறக்கல..ஆனால் இவரு உண்மையை உடச்சுட்டாரே..!

விஜய்யோட 67-வது படத்தை பத்தின அப்டேட்ட இயக்குநரான லோகேஷ் கனகராஜே எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து வரும் நிலையில், நடிகர் கார்த்தி அவரது அடுத்த அப்டேட்டை போட்டு உடைத்திருக்கிறார். 

நடிகர் கார்த்தியின் விருமன்: சுல்தான் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படம் நாளை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

கார்த்தி, அதிதி சங்கர்: முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். கார்த்தியும், அதிதி சங்கரும் சேர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பிலும், நேர்காணல்களிலும் படப்பிடிப்பின் போது நடைபெற்ற சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். 

லோகேஷ் கனகராஜ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய்யின் 67-வது படத்தை இயக்கவிருக்கிறார். விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில், அப்படத்தை முடித்து விட்டு, லோகேஷ் கனகராஜோடு இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில காலம் சோஷியல் மீடியாவுக்கு லீவு விட்டுள்ள லோகேஷ் விஜய் 67-வது படத்தின் அப்டேட்டை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார். 

கார்த்தி வெளியிட்ட சீக்ரெட்: விஜய்யின் 67-வது படத்தை தொடர்ந்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் இயக்குவார் என ஓபனாக ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் நடிகர் கார்த்தி. 2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதன் ஒரு பகுதியாக விக்ரம் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து கைதி இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜே வாய் திறக்காத நிலையில், கார்த்தி பட்டென்று கூறியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.