ரூ.250கோடியை ஏப்பம் விட்ட கமல்-சங்கர்..! லைகா புரடெக்சனுக்கு நாமமா?

20% படப்பிடிப்பு எப்போது நிறைவு பெறும்..!

ரூ.250கோடியை ஏப்பம் விட்ட கமல்-சங்கர்..! லைகா புரடெக்சனுக்கு நாமமா?

1996-ம் ஆண்டு கமல், சுஹாசினி, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வ் மெகா ஹிட்டான திரைப்படம் ’இந்தியன்’. அப்பா, மகன் என இரு வேடங்களில், இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் கமல். ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்தை பெற, ஒரு வீரர் பெற்ற கஷ்டம் முதல், சுதந்திரத்திற்கு பிறகு ஒரு சராசரி மனிதன், சமூகத்தில் பரவியிருக்கும் லஞ்சத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது தான் இந்தியன் படத்தின் மையக்கரு. அவ்வாறு பாதிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் மக்களிடம் இந்தியன் என அடையாளப்படுத்தி லஞ்சம் வாங்குபவர்களை தேடி தேடி கொல்லும் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தார் கமல்ஹாசன். வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை 21 ஆண்டுகளுக்கு பிறகு 2017-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோவில் வெளியிட்டார் கமல்ஹாசன்..

2018-ம் ஆண்டு கமல்ஹாசனின் பிறந்த நாளில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லெட்சுமி சரவணக்குமார் ஆகியோர் இப்படத்திற்கு வசனம் எழுப்படவுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து 2018 இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி, 2019-ல் படம் வெளியாகும் என இயக்குநர் சங்கர் அறிவித்தார். இப்படத்தோடு தனது 58 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்தார். 

இப்படி படக்குழுவினரின் ஒரு ஒரு அறிவிப்பும் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிர்களுக்கு அதிகரித்து வந்தது. 2018-ல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 2019ம் ஆண்டு தொடக்கத்தில் முதற்கட்ட படப்பிடிப்பும், பிப்ரவரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. யார் கண் பட்டதோ? சென்னைக்கு அருகே தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்து இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து துணை இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து தேர்தலும் நெருங்கியதால் கமல்ஹாசன் பிரசார வேலைகளிலும், சங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து அடுத்த படம் இயக்கவும் சென்றதால், இந்தியன் 2 படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது. இந்திய 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் சங்கர் வேறெந்த படங்களையும் இயக்க தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள். 

இதனையடுத்து ராம்சரணின் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக சங்கரும், தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.200கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டு இன்னும் 20% படப்பிடிப்பு மட்டுமே எடுக்கப்பட வேண்டிய இந்தியன் 2 படத்தின் நிலை குறித்து தலையில் துண்டு போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறது லைகா நிறுவனம். ”பேசாம நீதிமன்றம் போயிருக்க வேண்டாமோ” என்ற எண்ணத்தில்...!

இது ஒரு புறம் இருக்க, ஒருவேளை தயாரிப்பு நிறுவனத்திற்கும், சங்கருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மன கசப்பு நீங்கி படப்பிடிப்பு தொடங்கினாலும் கூட, கமல்ஹாசனால் இதில் பங்கேற்க முடியுமா? என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இந்தியன் 2 படத்தில் அவர் கிளீன் சேவ் செய்திருந்த நிலையில், விக்ரம் படத்திற்காக தனது எடையை கூட்டி, தாடி மீசையோடு தோற்றத்தையே மாற்றியுள்ளார் கமல்ஹாசன். ஆக விக்ரம் படத்தை முடித்து கொடுத்த பிறகு தான் இந்தியன் 2 படத்தில் அவரால் இணையமுடியும். அதற்குள் இயக்குநர் சங்கரை சமாதானப்படுத்துமா லைகா நிறுவனம்?