மூன்றாவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி..! கௌதம்-சிம்புவின் புதிய படத்தின் பெயர் வெளியீடு..! என்ன பெயர் தெரியுமா?

உடல் எடையை குறைத்து அசத்தியுள்ள சிம்பு..!

மூன்றாவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி..! கௌதம்-சிம்புவின் புதிய படத்தின் பெயர் வெளியீடு..! என்ன பெயர் தெரியுமா?

கடந்த 2008-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன்-சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவாகி வெளியான 'வாரணம் ஆயிரம்' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டானது. அதன் பிறகு இந்தக் கூட்டணி கடந்த 2016-ம் ஆண்டு 'அச்சம் என்பது மடமையடா' என்ற படம் மூலம் மீண்டும் இணைந்தது. அதன் பிறகு இந்தக் கூட்டணி எப்போது இணையும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது மீண்டும் இணையவுள்ளது. 

இந்தக் கூட்டணி இணையும் மூன்றாவது படத்துக்கு நதிகளிலே நீராடும் சூரியன் என வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அந்த டைட்டிலுக்கு என்ன பிரச்னை வந்தது என தகவல்கள் வெளியாகின. ஆனால் திடீரென இந்தப் படத்திற்கு ’வெந்து தணிந்தது காடு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில் ஏற்கனவே உடலை குறைத்து ஒல்லியாக உடல் எடையை குறைத்திருந்த சிம்பு, இந்தப் படத்தில் மாணவர் போன்ற தோற்றத்தில், அழுக்கு சட்டை, லுங்கியுடன் கையில் ஒரு கம்பை பிடித்தப்படி நிற்கிறார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மூவர் கூட்டணி தற்போது இணைந்திருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.