திருஷ்யம் 3 வெளியாகிறதா? இணையத்தில் வைரலாகும் புது போஸ்டர்!!

இந்திய திரையுலகின் ‘கள்டு’ படமாகக் கருதப்படும் திருஷ்யம் படத்தின் 3ம் பாகம், வெளியாக இருப்பதாக இணையத்தில் தற்போது ஒரு போஸ்டர் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

திருஷ்யம் 3 வெளியாகிறதா? இணையத்தில் வைரலாகும் புது போஸ்டர்!!

2013ம் ஆண்டு இயக்குனர் ஜீது ஜோசஃப் இயக்கத்தில் உருவான மலையாள கிரைம் திரில்லர் படமான திருஷ்யம் படம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றி, இந்தியா முழுவதும் பரவி, கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகி பெரும் வசூல் வேட்டை செய்தது.

கன்னடத்தில், வி. ரவிச்சண்திரன் நடிப்பில் திருஷியா படம் உருவானது. தெலுங்கில், வெங்கடேஷ் நடிப்பில் த்ருஷ்யம், தமிழில் கமலஹாசன் நடிப்பில், பாபநாசம், மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில், திருஷ்யம் ஆகிய படங்கள் உருவாகியது.

சாதாரண படிப்பற்ற ஒருவர், ஒரு பெரும் கொலையில் இருந்து, தனது குடும்பத்தை, சட்டமிடம் இருந்தும், போலீசிடம் இருந்தும், தன்னிடம் இருக்கும் சாதாரண சினிமா அறிவை வைத்து எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதையே. முதல் பாகம் பெரும் வெற்றியடைந்ததை அடுத்து, இரண்டாம் பாகமும் மலையாளத்தில் வெளியானது. ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும், நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தின் போஸ்அர் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ஆனால், அது ரசிகர் ஒருவர் உருவாக்கியது என்பது தற்போது தெரியவந்துள்ளது. திருஷ்யம் 3 தி கன்க்ளூஷன் என்று தலைப்பிடப்பட்ட இந்த போஸ்டர் பார்க்க மிகவும் அழகாக, அனைவரையும் கவரும் வண்ணம், அந்த கதாபாத்திரத்தம் சட்டத்தின் கையில் பிடிப்பட்டது போல காட்சியளிக்கிறது.

இதற்கு பல இணைய வாச்கள், தங்களது ஆதரவை தெரிவித்து வர, உண்மையில் படத்தின் அடுத்த பாகம் வெளியானால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பதிவிட்டு அந்த போஸ்டரை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.