விரைவில் வெளியாக இருக்கும் சியான் 60.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!

தந்தையும், மகனும் இணைந்து நடித்துள்ள ’சியான் 60’..!

விரைவில் வெளியாக இருக்கும் சியான் 60.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் முதன்முறையாக இணையும் படம் சியான் 60. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதி செய்கிறார். 

துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். தந்தையும், மகனும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சியான் 60 படத்தில் இணைந்திருக்கின்றனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் முடிந்த நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பில் படக்குழுவினர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். விரைவில் சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.