ஸ்டைலாக தம்மடிக்கும் விக்ரம்.. மிரட்டலான சீயான் 60 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு போஸ்டர் 

விக்ரமின் 'சியான் 60' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்டைலாக தம்மடிக்கும் விக்ரம்.. மிரட்டலான சீயான் 60 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு போஸ்டர் 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரின் மகன் த்ருவும் முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கும் படம் சீயான் 60. அந்த படத்தில் வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்ததை படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு உறுதிசெய்தனர்.

விக்ரமின் இன்னொரு படமான கோப்ரா படத்தையும் இதே தயாரிப்பாளர்தான் தயாரித்து வருகிறார். ஆனால் கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளிக் கொண்டே செல்வதால் முதலில் சீயான்60 படத்தை முடித்து வெளியிட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அதன் முதற்படியாக வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி சீயான் 60 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதை வித்தியாசமான போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது விக்ரம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.