“நீ வேணா சண்டைக்கு வாடா!”- சிம்புவை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை! காரணம் என்ன?

சிம்பு சமீபத்தில், வெந்து தணிந்தது காடின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது பெரும் சர்ச்சை ஆன நிலையில், அதற்கு தனது தரப்பில் இருந்து கருத்துகளைப் பதிவிட்டு, ட்விட்டரில், தனது போரை துவங்கியுள்ளார்.

“நீ வேணா சண்டைக்கு வாடா!”- சிம்புவை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை! காரணம் என்ன?

செப்டம்பர் 15ம் தேதி, திரையரங்குகளில் வெளியான சிம்புவின் புதிய படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய இந்த படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு இடையில், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருந்த வெந்து தணிந்தது காடு படம், தமிழில் மட்டும் வெளியாகி, தியேட்டர்களில் வெற்றி வாகை சூடி வருகிறது.

இந்நிலையில், படத்திற்கு ஆதரவளித்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘Thanks Giving' என்ற நிகழ்ச்சி தற்போது நடந்தது. அதில், தனது படத்திற்கு ஆதரவும், நல்ல விமர்சனமும் கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சிம்பு. அப்போது, தனது படத்திற்கு வந்த ‘நெகட்டிவ்’ விமர்சனங்கள் குறித்தும் பேசிய நிலையில், படத்தைக் குறித்து, பிரபல விமர்சகர் ‘ப்ளூ சட்டை மாறன்’ கொடுத்த மோசமான விமர்சனங்கள் குறித்து தனது கருத்துகளைக் கூறினார்.

மேலும் படிக்க | அப்பாடா! இந்த படத்துக்காவது தடை இல்லையே!- நெகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!!!

Watch: First single from Simbu's Vendhu Thanindhathu Kaadu is out | The  News Minute

அதில், உருவ கேலி செய்ய வேண்டாம் என்றும், தன்னை போல யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார். அப்போது பேசிய சிம்பு, “இந்த படத்தில், என் உடம்பைப் பற்றி உங்களால் (விமர்சகர்கள்) ஒன்றுமே எழுதமுடியவில்லை. யாரை குறிப்பிடுகிறேன் என உங்களுக்கே தெரியும். (அவர் குறிப்பிட்டது ப்ளூ சட்டை மாறன்). இங்கு கூடியிருப்பவர்கள் அல்ல. நான் சொல்லும் அந்த குறிப்பிட்ட நபர், எனது அனைத்து படங்களிலும், உருவ கேலி செய்தே படத்தின் விமர்சனமாக பேசியிருக்கிறார். ஒரு படத்தை விமர்சனம் செய்யலாம். ஒரு தனி பட்ட நபரையும், அவரது உருவத்தையும் விமர்சனம் செய்வது தவறு. நான் எதுத்துக் கொள்வேன். ஆனால், மற்றவர்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அதனால் இங்கு இதனை ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன்” எனக் கூறினார்.

இந்த பேச்சு பெரிதாக பேசப்பட்டதை அடுத்து, அனைவருக்கும் ப்ளூ சட்டை மாறன் பற்றி தான் சிம்பு குறிப்பிடுகிறார் என தெரிந்து மாறனை கேள்வி எழுப்பத் துவங்கினர். இதனால் கடுப்பான மாறன், தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சிம்புவை வம்பிழுத்து வருகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலான சிம்புவின் பழைய பாடல்களைக் குறிப்பிட்டு, பெண்களை இவர் கேவலமாக பேசுவார். ஆனால், நாங்கள் உருவகேலி செய்கிறோம் என சொல்கிறாரே! என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு.. 3 நாள் வசூலுக்கு ஓஹோ போடு..!

இதற்கு, சிம்புவின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். தொடர்ந்து தவறான விமர்சனங்களை வேண்டும் என்றே கொடுத்து வரும் மாறன், தனது படமான ‘ஆண்டி - இண்டியன்’ படத்தின் மூலம் ஏற்கனவே பல விமர்சனங்களை சந்தித்தவர். அதுமட்டுமின்றி, தனது விமர்சனங்கள் பார்வையாளர்களை அதிகம் கவர வேண்டும் என்பதற்காக, சில மோசமான தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான பீஸ்ட், வலிமை படங்களுக்கு விமர்சனம் செய்யும் போது, கதாநாயகர்களான விஜய் மற்றும் அஜித்தை உருவ கேலி செய்தும், நடிகர்களாக அவர்களது நடிப்பை விமர்சனம் செய்யாமல், தனிப்பட்ட முறையில் அவகளை விமர்சித்தும் வீடியோ வெளியிட்டார். இதனால், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுமே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டது கதை.

இந்நிலையில், செப்டம்பர் 15ம் தேதி வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் விமர்சனத்தில், ஒரு நடிகரை மோசமாக உருவ கேலி செய்திருந்தார். மலையாளத் திரையுலகில், தனக்கென தனி இடம் பிடித்த நடிகரான ஜாஃபரின் திறமை கண்டு தமிழ் திரையுலகம் அவரை இரு கரம் நீட்டி வரவேற்றது. வெப்சீரியியசில் துவங்கி, சமீபத்தில் வெளியான மாபெரும் வெற்றி திரைப்படம் ‘விக்ரம்’ படத்தில் கலக்கி இருந்தார் ஜாஃபர். இவரது நடிப்பு, வெந்து தணிந்தது காடு படத்திலும் பெரிதாக வரவேற்பு பெற்ற நிலையில், மாறனோ, “லில்லிப்புட்” என்றும், அரை குவாட்டர் என்றும் கேலி செய்து விமர்சித்திருக்கிறார்.

மேலும் படிக்க | யாரா இருந்தாலும் காசு கொடுத்தா தான் தீனி!!!- பாகம் 1 தானா? எத்தனை பாகங்கள் இன்னும் இருக்கிறதோ?

இதுவும் ரசிகர்களிடையே கடும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்நிலையில், கவிஞர் எழுதிய பாடல்களுக்கு, நடிகர் ஆத்மன் சிலம்பரசனை தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புவது எந்த விதத்தில் நியாயம் என, சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி, நெட்டிசன்கள் அனைவரும், ப்ளூ சட்டை மாறனை கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், ‘நீ வேணா சண்டைக்கு வாடா’ என வம்படியாக வம்பிழுக்கும் வடிவேலு போல, ப்ளூ சட்டை மாறனது செயல்கள் இருக்கிறது என, நெட்டிசன்கள் அவரை கேலி செய்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்