
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.பிரமாண்டமாக உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது, இப்படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்களை அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தின் 100 நாள் ஷூட்டிங் நிறைவையொட்டி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.அதில் தளபதி விஜய்யுடன் அனைத்து நடிகர்களும் இசையமைத்தபடி போஸ் கொடுத்திருந்தனர், அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.அந்த பாடலின் முதல் வார்த்தை 90'ஸ் Kid என தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.முதல் சிங்கள் பாடலாக வெளியாகவுள்ள அப்பாடலின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆர்வாமாக காத்திருக்கின்றனர்.