ஆடவில்லை என அரெஸ்ட் வாரண்டா? பாவம் இந்த நடன கலைஞர்!!!

ஒரு நிகழ்ச்சியில் ஆடாமல் இருந்ததற்காக, நடன கலைஞர் சப்னா சௌத்ரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிடி வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடவில்லை என அரெஸ்ட் வாரண்டா? பாவம் இந்த நடன கலைஞர்!!!

ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி மற்றும் நடன கலைஞர் தான் சப்னா சௌத்ரி. தகவல்களின் படி இவர், கடந்த 2018ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, முன்பணமும் வாங்கி இருக்கிறார். ஆனால், அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து, நிகச்ழ்ச்சியின் அமைப்பாளர்கள் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விவகாரத்தை நீதிமன்றம் வரை இழுத்துச் சென்றுள்ளனர். இதனால், பாடகர் மற்றும் நடன கலைஞர் சப்னா, லக்னோவின் ஏசிஜேஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

அவர் மீது மோசடி மற்றும் நம்பிக்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது இது முதன்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 2021ம் ஆண்டு, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, சப்னா சவுத்ரி மீது மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. சப்னாவை நிர்வகித்து வரும் ஒரு பிரபல நிர்வாக நிறுவனம், அவர் மீதும் அவரது தாய் மற்றும் சகோதரர் உட்பட பலர் மீதும் குற்றவியல் நம்பிக்கை மீறல், குற்றச் சதி, ஏமாற்றுதல் மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

FIR இன் படி, பிரபல ஹரியான்வி பாடகி கலைஞர் மேலாண்மை ஒப்பந்தத்தை மீறியதாக புகார் கூறப்பட்டது. அதில் அவர் வேறு எந்த நிறுவனத்திலும் பணிபுரியவோ அல்லது வேறு எந்த நிறுவனத்தில் சேரவோ மாட்டார் என்றும், புகார்தாரரின் எந்த வாடிக்கையாளருடனும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள மாட்டார் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. சப்னா ஒப்பந்தத்தை மீறியதாகவும், ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிராக வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.