'பிச்சைக்காரன்-2' தடை கோரி மேலும் ஒரு வழக்குப்பதிவு 

'பிச்சைக்காரன்-2' தடை கோரி மேலும் ஒரு வழக்குப்பதிவு 

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு  தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

சென்னை  உயர்நீதிமன்றத்தில்  ராஜகணபதி என்பவர்  தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களது  தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது.  அப்படத்தின் கதையை  அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாகவும் எனவே பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.  

இந்த நிலையில், பரணி என்ற உதவி இயக்குனர் தொடர்ந்துள்ள வழக்கில், தான் அஜித் நடித்த சிட்டிசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாகவும், பிச்சைக்காரன் 2 படத்தின் மூலக்கதை தன்னுடைய கதை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கதையை  பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்ததாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

அதே கதையை தற்போது பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ளதாகவும் எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு வருகிற செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.