அமலாபாலின் ஹாட்டான புகைப்படங்கள் வைரல்..!

அழகை மெருக்கேற்றி ரசிகர்களை கவரும் அமலா..!

அமலாபாலின் ஹாட்டான புகைப்படங்கள் வைரல்..!

தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான  அமலாபால், நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி படங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்ததால், அமலாபால் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளானார்.  அதன் பிறகு நடித்த மைனா படம் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. 

அதைத் தொடர்ந்து விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ஆடை, ராட்சசன் போன்ற படங்கள் அமலா பாலின் நடிப்பை பெரிய அளவில் பேச வைத்தன. அதிலும் ’ஆடை’ படத்தில் ஆடையில்லாமல் நடித்து பெரும் பரபரப்பை கிளப்பினார் அமலா பால். தற்போது ’அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார்.

2011 ல் தெய்வ திருமகள் படத்தில் நடித்த போது டைரக்டர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டடு 2014-ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை 2017-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. 

திருமண முறிவுக்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர், தமிழில் விஜய், விக்ரம், ஜெயம் ரவி, மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், கன்னடத்தில் சுதீப் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

முதல் திருமணம் விவாகரத்தை தொடர்ந்து, இரண்டாவதாக மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்துக் கொண்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் புகைப்படங்களை சில மணித்துளிகளில் இன்ஸ்டாவில் இருந்து நீக்கினார். 

அதன் பிறகு இவரது இந்தப் புகைப்படங்களை வெளியிடங்களில் யாரும் பயன்படத்தக் கூடாது என குறிப்பிட்டிருந்தார். தற்போது அவர் யாருடன் இருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாத நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்தவை. சமீபத்தில் அவரது ஹாட்டான போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.