பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!!

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!!

தென்னிந்திய சினிமாவின் 1960 முதல் 80 வரையிலான காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்
நடிகை ஜெயந்தி. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1900 ஆம் ஆண்டு வெளியான ”யானைப் பாகன்” என்ற படத்தின் மூலம் நடிகை ஜெயந்தி தமிழில் அறிமுகமானார். அதையடுத்து நினைப்பதற்கு நேரமில்லை, இருவர் உள்ளம், படகோட்டி, கர்ணன், நீர்க்குமிழி, எதிர்நீச்சல், வெள்ளி விழா, மைந்தன், கோபாலா கோபாலா, ஹவுஸ்புல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்