டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு... ரசிகரிடம் கொந்தளித்த நடிகர் சித்தார்த்

திலீப்குமார் போட்டோவை பார்த்துட்டு ஒரு ரசிகர், பார்க்க அக்‌ஷய் குமார் மாதிரியே தெரியுது என்று எதார்த்தமாக சொல்ல, ’டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு’என்று கொந்தளித்திருக்கிறார் சித்தார்த்.

டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு... ரசிகரிடம் கொந்தளித்த நடிகர் சித்தார்த்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் இன்று உடல்நலக்குறைவினால் மும்பையில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், உலகம் அறிந்த மிகப் பெரிய நடிகர்களில் ஒருவர் நம்மை விட்டு பிரிந்துள்ளார். திரையுலகம் ஒரு திறமையான நடிகரை இழந்துவிட்டது. திலிப்குமார் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். இன்றைய தலைமுறை அவரைப் பற்றி அறிந்து கொண்டாடுகிறது. அவர் என்றென்றும் இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் இருந்த திலீப்குமார் போட்டோவை பார்த்துட்டு ஒரு ரசிகர், பார்க்க அக்‌ஷய் குமார் மாதிரியே தெரியுது என்று எதார்த்தமாக சொல்ல, ’டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு’என்று கொந்தளித்திருக்கிறார் சித்தார்த்.

டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு..கொந்தளித்த சித்தார்த்

அதற்கு அந்த ரசிகர், திலிப்குமாரின் முகவெட்டை பார்த்துட்டு அக்‌ஷய்குமார் மாதிரி தெரியுது என்றுதான் சொன்னேன். மற்றபடி வேறொன்றும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.