

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆரம்ப கால படங்களில் நடித்த நடிகர்கள் பலரையும் தனது அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பளித்து வருகிறார். தற்போது விக்ரம் படத்திலும் வாய்பளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
'கைதி' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் நரேன் தற்போது விக்ரம் படத்திலும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதி படத்தை அடுத்து நரேன் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைவதாக தகவல்கள் கசிந்தது.
இந்த தகவல் இணையத்தில் காட்டு தீயை போன்று பரவ நடிகர் நரேனுக்கு சினிமா வட்டாரங்கள் வாழ்த்துகள் அள்ளி தெளித்துள்ளனர். இதனையடுத்து விக்ரம் படத்தில் நடிகர் நரேனுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன் என்றும் கமல்ஹாசனை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன், அவர் படத்தில் நடிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி என்கிறார் நரேன்.