சமந்தாவின் கண் பறிக்கும் அழகில் மயங்கும் இளைஞர்கள்!

சாகுந்தலம் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், ரசிகர்கள் பலரும், சமந்தாவின் அழகை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
சமந்தாவின் கண் பறிக்கும் அழகில் மயங்கும் இளைஞர்கள்!
Published on
Updated on
2 min read

சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை, பல தரபட்ட விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், சினிமா துறையில், தமிழிலும், தெலுங்கிலும், முன்னணி வகித்தே வருகிறார் அவர். மேலும், இந்தியில் வெளியான வெப் சீரியஸ், “ஃபேமிலி மேன் - 2” -வில் கூட மிரள வைக்கும் தைரியமான ஒரு நக்சலைட் கதாபாத்திரத்தை செய்து, சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

தமிழில் தனது திரைப் பயணத்தை துவங்கினாலும், தெலுங்கில் கொடி கட்டி பறக்கும் சமந்தா, பல படங்களில், பல பெரும் நடிகர்களுக்கு ஜோடியாகவும், ஒரு சில பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும், ஃபீமேல் செண்ட்ரிக் படங்களில் நடித்தும், பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார் அவர்.

சமீபத்தில் வெளியான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஹிட்டடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் மூலம், பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல காமெடி படத்தைக் கொடுத்த சமந்தா, தற்போது பான் - இந்தியா படங்களில் களமிறங்கியுள்ளார். குறிப்பாக, புராண கதைகளின் காலமாக தற்போது சினிமா பார்க்கப்படும் நிலையில், தானும் ஒரு புராண கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சமந்தா.

குணசேகர் இயக்கத்தில் நீலிமா குணா தயாரிப்பில், தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் ‘சாகுந்தலம்’ என்ற புராண கதையில், சகுந்தலா தேவியாக நடிக்கிறார் சமந்தா. காளிதாசரின் நாடகங்களில் மிகவும் பிரசித்தியான ‘அபிஜன சாகுந்தலம்’ என்ற நாடகத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படமானது, வருகிற நவம்பர் 4ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இந்த போஸ்டர் வெளியானதில் இருந்து, ரசிகர்கள், சமந்தாவின் அழகைப் போற்றியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர். பொம்மை போல இருப்பதாகவும், உண்மையான சகுந்தலை கூட இவ்வளவு அழகா என தெரியவில்லை என்றெல்லாம், நெட்டிசன்கள் கமெண்ட் செய்து இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர். முதன் முதலாக, ஒரு புராண கதையில், இளவரசியாக நடிக்க இருக்கும் சமந்தாவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வர, ரசிகர்களோடு, தானும் அதே அளவு உற்சாகத்துடன் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருப்பதாக தனது சோசியல் மீடியாவில் சமந்தா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com