யூடியூபர் டி.டி.எப்.வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி..!

யூடியூபர் டி.டி.எப்.வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி..!

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எஃப். வாசனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

டி.டி.எஃப் வாசனின் ஜாமின் மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இதனால், மீண்டும் ஜாமின் கோரி டி.டி.எப்.வாசன் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

மேலும், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியூபர் டி.டி.எப்.வாசனின் பைக்'கை எரித்து விட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்துள்ளார். 

3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்ததால் உயிர் தப்பியிருக்கிறார் - காவல் துறை தனது யூ டியூப் சேனலில் அவரை பிந்தொடரும் 45 லட்சம் பேர் சிறார்கள் அதி வேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஜாமின் வழங்க காவல்துறையினர் தரப்பில் கடும் எதிர்ப்பு. விளம்பரத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூ-டியூப் சேனலை மூடி விட வேண்டும் என நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கருத்து தெரிவித்ததோடு, வாசனுக்கு சிறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க   | திமுக எம்.பி. வீட்டில் ஐடி ரெய்டு!