ட்ரெய்னருக்கே சவால் விடுத்த சமந்தா!! வெளியான ஒர்க்கவுட் வீடியோ...குஷியில் ரசிகர்கள்

சமந்தா வெளியிட்ட ஒர்க்கவுட் வீடியோ...

ட்ரெய்னருக்கே சவால் விடுத்த சமந்தா!! வெளியான ஒர்க்கவுட்  வீடியோ...குஷியில் ரசிகர்கள்

கோலிவுட்டிலும்,பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. அவர் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக்  என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. என்னதான் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும்  அவ்வப்போது  தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உடற்பயிற்சியை ஒருபோதும் கைவிட்டதில்லை.

இந்நிலையில்  சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஒர்க்கவுட் வீடியோவை அடிக்கடி ஷேர் செய்து வருகிறார்.  சமீபத்தில் கூட  அவர் தனது பயிற்சியாளரின் உதவியுடன் ஹெவிவெயிட் லைட்டைக் தூக்கும் workout வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மேலும் அந்த வீடியோவிற்கு, "தாழ்ந்து போ அல்லது வீட்டிற்குச் செல்லுங்கள், எனது படிவத்தை சரிசெய்கிறேன்" என்று தலைப்பிட்டிருந்தார்.

இதேபோலவே தற்போது ஒரு புதிய ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு Kickstart your 2022 with this no equipment 'level- up’ challenge and feel the BURN. என்னுடைய ட்ரெய்னர் எனக்கு சவால் விடுத்திருந்தார். நான் அவருக்கு சவால் விட்டேன். என்னால் முடியும். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் பலரும் சூப்பர் தலைவி, ஷேம் punishment given in school இப்படியெல்லாம் கமெண்ட்ஸ்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.