இந்திய சினிமாவின் டான்-உடன்..! ரஜினியோடு,சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதிவு..

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயன் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய சினிமாவின் டான்-உடன்..! ரஜினியோடு,சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதிவு..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியானது . இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்க அருள் மோகன் நடித்து இருந்தார். 

இப்படம் மே மாதம் 13 ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது வரை வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் வசூல் மட்டும் ரூபாய் 100 கோடியை ஈடியதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. 

இதன் இடையில் டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். தற்போது சிவகார்த்திகேயனை நேரில் அழைத்தும் பாராட்டியுள்ளார். இது குறித்து பதிவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பின் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவில் அவர் “இந்திய சினிமாவின் டான்” ரஜினிகாந்த் சார்ரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும். உங்கள் நேரத்திற்கும் டான் படத்திற்கான உங்கள் பாராட்டிற்கும் நன்றி தலைவா!.. என பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவானது கடும் வைரலாகி வருகிறது.