அந்த நடிகருடன் திருமணமா?...ராஷ்மிகா விளக்கம்.!!

அந்த நடிகருடன் திருமணமா?...ராஷ்மிகா விளக்கம்.!!

2016 ஆம் ஆண்டு கிரீக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாவர் தான் ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வரும் இவர்,

2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்ல தமிழ் ரசிகர்களையும் வெகுவாகவே கவந்தது.

இந்த படத்தை அடுத்து இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிய தொடங்கியது. நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், கீதா கோவிந்தம் படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டாவுடன் காதல் கிசு கிசுவில் சிக்கி வந்தார்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ஒரு தெலுங்கு மீடியாவிற்கு பேட்டி அளித்த ராஷ்மிகா, அதில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், எனது திருமணத்திற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது, இது டைம் பாஸ் வதந்தி என்று கூறி இருக்கிறார்.