நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் முறிவா...? முற்றுப்புள்ளி வைத்த காதலன்

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலிருந்து பிரிந்து விட்டார்கள் என உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் காதலன்

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் முறிவா...? முற்றுப்புள்ளி வைத்த காதலன்

சிம்பு,பிரபுதேவா ஆகியோருடனான காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி, 'லிவிங் டுகெதர்' பாணியில் ஒரே வீட்டில் வாழ்ந்தும் வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

ஆனால் இது குறித்து இருவரும் எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர்.இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் நெற்றிக்கண் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாக உள்ளதாகவும்,இந்த பாடலை அனைவருக்கும் பகிர காத்திருப்பதாகவும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒரே நேரத்தில் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம்  பிரியவில்லை  என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்