ரசிகர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? நெல்சனிடம் மனம் திறந்த தளபதி விஜய்!

ரசிகர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? நெல்சனிடம் மனம் திறந்த தளபதி விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. அடுத்தக்கட்டமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி வருகின்ற 10ஆம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்நிலையில் தற்போது அந்த பேட்டிக்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பினை கூட்டியிருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சும்மா மாஸான கெட்டப்புடன் நடிகர் விஜய் அமர்ந்து நெல்சனின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

அதன்படி முதலில் வெளியான ப்ரோமோவில் ஒரு குட்டி கதை கூறுங்கள் என விஜய்யிடம் நெல்சன் கேட்க , ‘ஸ்டாக் இல்லை’ என்று விஜய் கூறுகிறார். அப்போது நெல்சன், ‘நல்லா பாக்கெட்டுல தேடி பாருங்க சார், எங்கேயாச்சும் இருக்கும்’ என்று கூற அதற்கு விஜய், ‘ ஷூட்டிங் முடிஞ்சுருச்சுங்கிற தைரியத்தில என்ன வேணும்னாலும் கேட்பிங்களா? என்று சிரித்து கொண்டே காமெடியாக மிரட்டும் காட்சிகள் வீடியோவில் அமைந்திருக்கும்.

இதற்கு அடுத்தப்படியாக தற்போது இரண்டாம் கட்ட ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் 10 ஆண்டுகள் நீங்கள் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்ததற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கா? என்று நெல்சன் கேட்டபோது, ‘ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சி ஒன்று நடந்தது’ என்று அதனை விளக்குகிறார்.

அதன்பின் ரசிகர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று நெல்சன் கேட்டதற்கு ‘அட்வைஸ் பண்ணும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று சொல்லி நான் எஸ்கேப் ஆக விரும்பவில்லை’ என்று கூறி அதன் பின் ரசிகர்களுக்கு தனது அறிவுரை கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வரும் இந்த ப்ரோமோ வீடியோக்களை பார்த்த விஜய் ரசிகர்களுக்கு இந்த பேட்டி குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்ரே சொல்லலாம்.