லைலாவை கொன்றது யார்? டிரைலரிலேயே படத்தின் முழு கதையை கூறிய விஜய் ஆண்டனி படம்..!

கொலை’’ திரைப்படம் உலக தரம் வாய்ந்த சிறந்த படமாக இருக்கும் - விஜய் ஆண்டனி..!

லைலாவை கொன்றது யார்? டிரைலரிலேயே படத்தின் முழு கதையை கூறிய விஜய் ஆண்டனி படம்..!

விஜய் ஆண்டனி: சினிமாவில் இந்த வேலையை இவர் மட்டும் தான் செய்ய முடியும் என்ற சட்டம் இல்லை. யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம். அப்படி தனது துறையை தாண்டி வேறு இடத்திற்கு செல்லும் போது ஜெயித்தவர்கள் சிலர் தான். அப்படிப்பட்டவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் ஒரு இசையமைப்பாளராகத் தான் சினிமா உலகில் அறியப்பட்டார். ஆனால் காலப்போக்கில் நடிப்பிற்கு இவர் வருவார், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடிப்பார் என யாரும் எதிர்பாத்திருக்க முடியாது. இளம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மற்றும் பெண்களை தன் பக்கம் இழுத்துள்ளார் விஜய் ஆண்டனி. 

வித்தியாச கதைகளம்: இவரது படங்கள் அனைத்துமே வித்தியாசமான பாணியில் தான் இருக்கும் ஒரு படத்திற்கு மற்றொரு படம் வேறுபட்டதாகத் தான் இருக்கும். நான், சலீம் , பிச்சைக்காரன், சைத்தான், திமிரு புடிச்சவன், காளி என இவரது நடிப்பில் உருவான கதைகள் யாவுமே சமூகத்திற்கு அப்போதைக்கு தேவையான கருத்துகளை கூற மறந்திருக்காது. செண்டிமெண்ட், காமெடி, சைக்கோ த்ரில்லர், அரசியல்வாதி என பல பல கெட்டப்புகளில் வித்தியாச கதைகளத்தில் தனக்கென ஒரு பாணியை கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

கைவசம் படங்கள்: இவரது நடிப்பில் அக்னி சிறகுகள், ரத்தம், காக்கி, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன், தமிழரசன், பிச்சைக்காரன் 2 என அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளன. ஒரு ஒரு படத்தின் அப்டேட்டும் வெளியாகும் போது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

கொலை: அந்த வரிசையில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’’கொலை’’. பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி சர்மா என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றனர். சைக்கோ த்ரில்லர் படமாக கொலை உருவாகியிருக்கிறது. 

இதையும் படிங்க: கொலை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு..!

டிரெண்டிங் ஆன ஹேஷ்டேக்: லைலாவை கொன்றது யார்? என்ற ஹேஷ்டேக் சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் வைரலானது. ரசிகர்கள் பலருக்கும் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. யார் அந்த லைலா? அவர் ஏன் கொல்லப்பட்டார்? எங்கு கொலை நடந்தது? என பலருக்கும் பல சந்தேகங்கள் எழுந்தன. 

மோஷன் போஸ்டர் & ஃபர்ஸ்ட் சிங்கிள்: இவை இப்படி சென்று கொண்டிருக்க, கடந்த மாதம் 15-ம் தேதி கொலை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. "ஒரே ஒரு விளக்கு அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருக்க, படத்தில் நடித்திருந்த நடிகர்கள் ஆங்காங்கே நிற்கும் படியாக அந்த மோஷன் போஸ்டர் அமைந்திருந்தது. அதுமட்டுமின்றி போஸ்டரின் இறுதியில் பார்த்த நியாபகம் இல்லையோ என்ற பழைய பாடலின் ஹம்மிங் வர" அங்கே ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கு முன்னதாக 'நீர்குமிழோ' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உலகத் தரமான படம்: இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, "இப்படம் உலக தரமிக்க சிறந்த படமாக இருக்கும்" எனக் கூறியிருந்தார். 

டிரைலர்: இந்த நிலையில், இன்று கொலை படத்தின் டிரைலரை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்டுள்ளார். படத்தின் பெயரை பார்க்கும் போதே, இந்தப் படம் நிச்சயம் கொலையை சுற்றித் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல லைலா என்ற மாடல் அழகி மர்மமான முறையில் உயிரிழப்பதும், அவரை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? என்பது தான் கதை என்பதை போட்டு உடைத்துள்ளார்கள். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உட்பட ஒரு சிலர் மட்டுமே தெரிந்த முகங்களாக உள்ளனர். 

சூப்பர் த்ரில்லர்: மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் யாவுமே புதுமுகமாகவும், இளையவர்களாகவும் உள்ளனர். இதில் விஜய் ஆண்டனி ஒரு வயதான போலீஸ் அதிகாரியாக வருகிறார். முழுக்க  முழுக்க த்ரில்லர் பாணியில் கொலை படம் உருவாயிருப்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. டிரைலரின் இறுதியில் யார் லைலாவை கொன்றது என்ற சந்தேகம் நமக்கே எழும் அளவுக்கு உள்ளது கொலை படத்தின் டிரைலர்.