அடுத்த சந்திரமுகி ஆகபோகும் நடிகை யார்..? இதோ நீங்களே பாருங்க....

’சந்திரமுகி 2’ பாகத்தில் முழுசா சந்திரமுகி ஆக போகும் நடிகை யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சந்திரமுகி  ஆகபோகும் நடிகை யார்..? இதோ நீங்களே பாருங்க....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘சந்திரமுகி’. ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, மாளவிகா, விஜயகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தையே கொண்டு உருவாக்கப்பட்ட சந்திரமுகி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்தது.

இந்த படத்தில் ‘சரவணன்’ என்ற பெயரில் மனநல மருத்துவராக நடித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தன் நண்பனின் மனைவியை மனரீதியாகவும், சந்திரமுகி என்ற அமானுஷயத்திடமிருந்தும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை. ஜோதிகா இப்படத்தில் சந்திரமுகியாக தன் மிரட்டலான நடிப்பை வெளிபடுத்திருப்பார். அதுவும் ‘ரா...ரா...’ பாடலில் இவருடைய நடன காட்சிகள் அனைத்தும் இப்படத்திற்கு கூடுதல் ப்ளஸாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி, பிரபு, வடிவேலு  உள்ளிட்டவர்களையே தன்னுடைய நடிப்பால் பீட் செய்திருப்பார் ஜோதிகா. மலையாளத்தில் இந்த கேரக்டரில் ஷோபனா நடித்து அசத்திருப்பார். 

மலையாள படத்தின் ரீமேக்காக வெளியான இந்தப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு  சிறப்பான திரைக்கதையுடன் பி.வாசு கொடுத்திருப்பார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சந்திரமுகி 2 எடுப்பது குறித்து பி.வாசு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்களில் நீண்ட நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது. 

இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ பாகம் குறித்த அறிவிப்பை தற்போது லைகா புரொடக்‌ஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முன்னதாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் இந்தப் படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில், தற்போது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு இருவரும் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் படத்தின் கதாநாயகி யார் என்பது விரைவில் வெளியாகும் என்று கூறினர். தற்போது படத்தில் ராஷி கண்ணா அல்லது ஆன்ட்ரியா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் யார் அடுத்த சந்திரமுகி? அல்லது வேறோருவர் மாற்றப்படுவாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் பார்க்கலாம்....

அதேபோன்று விரைவில் இப்படத்தின் சூட்டிங்கை தொடங்கி, ஒரேகட்டமாக முடித்து விரைவிலேயே ரசிகர்களுக்கு விருந்தாக்க லைகா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சந்திரமுகி 2 ஆம் பாகம் சந்திரமுகி கதையை தொடர்ந்து வருமா அல்லது முற்றிலும் வித்தியாசமான கதையை வாசு கையிலெடுத்துள்ளாரா என்று படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.