சிம்புவின் மாநாடு படம் எப்போது ரிலீஸ்?

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படம் இறுதி கட்டத்தில் இருப்பதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு படம் எப்போது ரிலீஸ்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சின்பு நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.  எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரி கேரக்டரில் முக்கிய வில்லனாக நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், டேனியல் அன்னி போப், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோன்று யுவன் சங்கர் ராஜா இசையில் ‘மாநாடு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டிராக்கும் வெளியாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகளும், சண்டைக்காட்சிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்த பின்னர் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.