சமந்தா தான் எனக்கு சிறந்தவர் ! மீண்டும் இணையத்தில் தீயாய் பரவும் நாகசைதன்யாவின் பதில்

சமந்தா தான் எனக்கு சிறந்தவர் ! மீண்டும் இணையத்தில் தீயாய் பரவும் நாகசைதன்யாவின் பதில்

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர் தான்  சமந்தா மற்றும் நாக சைதன்யா. இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக தங்களது 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தங்களது விவாகரத்து அறிவிப்பை  சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அறிவித்திருந்தனர். சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே கூறலாம்.

ஆனால் பிரிவிற்கு பிறகு இருவரும் தங்களின் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய பாடல் சென்சேஷனல் ஹிட்டானது.

இந்நிலையில் தற்போது நாக சைதன்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் சமந்தா  குறித்து பேசியுள்ளார். திரையில் உங்களுக்கு பொருத்தமான நடிகை யார் என கேட்டதற்கு "சமந்தா" என பதிலளித்துள்ளார்.