பொன்னியின் செல்வன் படம் பாருங்கள்.. ஆனந்த் மஹிந்திராவுக்கு லைகா நிறுவனம் வேண்டுகோள்.. எதற்காக?

தஞ்சையின் சிறப்பை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா..!

பொன்னியின் செல்வன் படம் பாருங்கள்.. ஆனந்த் மஹிந்திராவுக்கு லைகா நிறுவனம் வேண்டுகோள்.. எதற்காக?

75 ஆண்டுகால தவம்:

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் இன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளில் யாராலும் எடுக்க முடியாத ஒரு நாவல் என்றால் அது பொன்னியின் செல்வன். 

பல சிக்கல்கள்:

எம்.ஜி.ஆர் தொடங்கி உலகநாயகன் கமல்ஹாசன் வரை பலரும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எடுக்க முயற்சித்து தோற்று போகினர். அத்தனை நட்சத்திரங்கள், இடங்கள் போன்ற பல சிக்கல்கள் இந்தப் படத்திற்கு இருந்தது. 

2 வருட உழைப்பு:

காதல் படங்களுக்கு பெயர் போன இயக்குநர் மணிரத்னமும் இந்த நாவலை எப்படியேனும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என வீராப்பு கொண்டு, தீவிர முயற்சிகளுக்கு பிறகு கடந்த 2 வருடமாக உழைத்து ஒருவழியாக படமாக கொண்டு வந்துள்ளார். 

நட்சத்திர பட்டாளம்:

ஐஸ்வர்யார் ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் என ஒரு நட்சத்திர பட்டாளத்தை ஒன்றாக இணைத்து கிட்டதட்ட 150 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருந்தார் மணிரத்னம். 

மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்:

படத்திலிருந்து வெளியான ஒவ்வொரு அப்டேட்டும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை வெளியான படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரம்மாண்டங்களை திரையில் காண, காண ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனதாக தெரிவித்து வருகின்றனர். 

பெரியகோவில் சிறப்பு:

இந்த நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் "தஞ்சை பெரிய கோயில் குறித்த பெருமைகளை கூறும் வீடியோ" ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு காரணம், படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக படக்குழுவினர் மும்பை சென்றிருந்த போது, நடிகர் விக்ரம் தஞ்சை பெரியகோவில் பற்றி பெருமையாக பேசியிருந்தது இணையங்களில் வைரலானது. 

ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்:

தஞ்சை கோயிலின் பெருமைகளை விளக்கும் வீடியோவை பதிவிட்டதோடு, திரமையான வடிவமைப்பாளர்கள் உருவக்கிய அற்புதமான கோவில் தஞ்சை பெரிய கோவில் என்றும், சோழப்பேரரசு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாம் உண்மையில் உணரவில்லை என்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்து உலகிற்கு உரக்க சொல்ல தவறவிட்டோம் என்றும் பதிவிட்டுள்ளார். 

படத்தை பாருங்கள்:

இதற்கு பதிலளிக்கும் விதமாக, “உங்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நிச்சயம் 'பொன்னியின் செல்வன்' இருக்கும் என்றும் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது என்றும் இந்த படத்தை நீங்கள் பாருங்கள்” என லைகா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.