WEMISSYOUVIVEKSIR..சரவணன் அருள் பகிர்ந்த புகைப்படங்கள்..நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

மறைந்த நடிகர் விவேக் இறுதியாக நடித்த திரைப்படம் ’தி லெஜெண்ட்’..!

WEMISSYOUVIVEKSIR..சரவணன் அருள் பகிர்ந்த புகைப்படங்கள்..நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

லெஜெண்ட் சரவணன் மறைந்த நடிகர் விவேக்குடன் தி லெஜெண்ட் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

தி லெஜெண்ட்: லெஜெண்ட் சரவணன் ஸ்டோர் கடையின் உரிமையாளரான சரவணன் அருள், நடிப்பில் கடந்த 28-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது ”தி லெஜெண்ட்” திரைப்படம். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா, மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார், பிரபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். 

விமர்சனங்கள்: விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணன் அருள் படம் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார் சரவணன் அருள்.  இருப்பினும் கூட, அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாது தி லெஜெண்ட் என்ற படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து அதனை பான் இந்தியா படமாகவும் வெளியிட்டார். படத்தை பார்த்த பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். 

மறைந்த நடிகர் விவேக்: பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த கடைசி படம் தி லெஜெண்ட். இந்தியன் 2 படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தி லெஜெண்ட் படத்தில் முழுமையாக நடித்திருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கின் போது யாரும் எதிர்பாரா வண்ணம் நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கினாலும் விவேக்கை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் வேறு நடிகரை வைத்து எடுக்க வேண்டும் என படக்குழு கூறியது. ஆனால் தி லெஜெண்ட் படத்தில் விவேக்கின் போர்ஷன் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்திருந்தது. மிச்ச பகுதிக்கு வேறு நடிகரை வைத்து எடுக்காமல், விவேக்கின் முகத்தை மார்ஃபிங் செய்து படத்தை முடித்திருந்தனர். 

மிஸ் யூ விவேக் சார்:  இந்த நிலையில், சரவணன் அருள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறைந்த நடிகர் விவேக்குடனான படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 'மறக்க முடியாத நிகழ்வுகள்' என கேப்ஷன் கொடுத்துள்ள சரவணன் அருள், "wemissyouviveksir" என்ற ஹேஷ்டேக்கையும் ஷேர் செய்துள்ளார்.