படப்பிடிப்பின் போது தவறி விழுந்த விஷால் - சிகிச்சைக்காக கேரளா செல்ல இருப்பதாக தகவல்!

படப்பிடிப்பின் போது தவறி விழுந்த விஷால் - சிகிச்சைக்காக கேரளா செல்ல இருப்பதாக தகவல்!

நடிகர் விஷால் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து கொண்டிருந்த போது ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைக்காக கேரளா செல்கிறார்.

விஷால் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் நடந்ததுள்ளது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. அப்போது அடியாட்களுடன் மோதிக் கொண்டு  குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் நொடி பொழுது தவறியதால் காங்ரீட் சுவற்றில் மோதி விஷால் கையில் அடிப்பட்டது. சில மணிநேரம் சிகிச்சை எடுத்து விட்டு மீண்டும் விஷால் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில், தீவிர வலியின் காரணமாக விஷால், கேரளாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக செல்லவுள்ளாராம். இதனால்  படப்பிடிப்பானது  மார்ச் மாததிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.