மும்பை சென்சார் போர்டு மீது விஷால் புகார்..!

மார்க் ஆண்டனி படத்திற்கு மும்பை சென்சார் போர்டு 6 அரை லட்சம்,  லஞ்சம் கேட்பதாக நடிகர் விஷால் புகார் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மார்க் ஆண்டனி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் லஞ்சமாக கேட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த பணத்தை மேனகா என்ற இடைத்தரகரிடம்  அளித்ததற்கான வங்கி கணக்கு விவரங்களையும் விஷால் வெளியிட்டுள்ளார்.

உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு பயன்படுவது வேதனை அளிப்பதாக அவரது 'X' தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.