இரண்டு நாட்களில் வசூல் வேட்டை நடத்திய விருமன்.. ஆமிர்கானை வாஷ் அவுட் செய்த கார்த்தி..!

இரண்டு நாளில் விருமன் திரைப்படம் 17 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக தகவல்..!

இரண்டு நாட்களில் வசூல் வேட்டை நடத்திய விருமன்.. ஆமிர்கானை வாஷ் அவுட் செய்த கார்த்தி..!

முதல் இரண்டு நாட்களில் வசூல் வேட்டை நடத்தியுள்ள விருமன் திரைப்படம் வார இறுதிநாட்களில் மேலும் வசூலை அள்ளும் என படக்குழுவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

விருமன்: முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் ஆகியோரது நடிப்பில் கடந்த 12-ம் தேதி வெளியான திரைப்படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என ஒரு குடும்பத்திற்கான படமாக வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

ப்ரோமோஷன்: இப்படத்திற்காக படக்குழுவினர் கொடுத்த ப்ரோமோஷன் பணிகள், ரசிகர்களுக்கு இப்படம் பார்க்க ஆர்வத்தை தூண்டியது எனலாம். கார்த்தியும், அதிதி சங்கரும் வளைத்து, வளைத்து ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். அதிதி சங்கருக்கு இது முதல் படம் என்பதால், இப்படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. 

விமர்சனம்: முத்தையா படம் என்றாலே கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இருக்கும். அப்படி தான் விருமன் படமும் முற்றிலும் கிராமத்து கதைகளத்திலேயே உருவாகியிருந்தது. இருப்பினும், இதற்கு முந்தைய படங்களின் காட்சிகளே இப்படத்திலும் நிரம்பி இருப்பதாகவும், புதிதாக எதுவும் இல்லை என எதிர்மறையான விமர்சனங்களும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக உள்ளது என்ற நேர்மறையான விமர்சனங்களும் விருமன் படத்திற்கு கிடைத்துள்ளது. 

வசூல்: 25கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருந்த விருமன் திரைப்படம் வெளியான முதல் நாளிலையே 8 கோடி ரூபாய் வரை வசூல் புரிந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் முதல் இரண்டு நாளில் விருமன் திரைப்படம் 17 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாகவும், இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விருமனோடு போட்டியாக வெளியான ஆமிர்கானின் லால் சிங் சத்தா படு தோல்வியை சந்தித்ததால், வார இறுதி நாட்களில் விருமன் படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.