வில்லிசை வேந்தர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் காலமானார்...

பத்மஸ்ரீ விருது பெற்ற வில்லுப்பாட்டு இசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் நேற்று இரவு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

வில்லிசை வேந்தர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் காலமானார்...

திருநெல்வேலி மாவட்டம் சந்திரபுதுகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பு ஆறுமுகம். 1928 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது சிறு வயதில் வில்லிசைப் பாட்டின் மீது ஆர்வம் கொண்டு தனது வில்லிசை பயணத்தை துவக்கினார். இதுவரை கலைவாணரின் 19 திரைப்படங்களுக்கு வில்லிசை பாட்டு பாடல் பாடியுள்ளார்.

இவரது வில்லுப் பாட்டு, கமலஹாசன் எழுதி, தயாரித்து நடித்த “உத்தம வில்லன்” படத்தின் அறிமுக பாடலாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நாகேஷின் 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதி அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களில் பெரிய பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சுப்பு ஆறுமுகம் காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டுகளை இசைத்துள்ளார்.

மேலும் படிக்க | எப்படி சார்..இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க....- விக்ரமை மெச்சிய விக்ரம்!

அவரது அயராத இசைப்பணி காரணமாக வில்லிசை வேந்தர் என போற்றப்படுவதுடன் மத்திய அரசு சார்பில் வழங்கக்கூடிய உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. இதே போல் கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகடமி விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சென்னை கே கே நகரில் சொந்த வீட்டில் வசித்து வந்த அவர் கடந்த மூன்று ஆண்டாக வயது மூப்பின் காரணமாகவும்  மற்றும் நுரையீரல் சளி காரணமாகவும் வீட்டிலேயே இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 8: 45 மணிக்கு அவரின் 95 ஆவது வயதில் மரணத்தை தழுவியுள்ளார்.

மேலும் படிக்க | அப்போ இந்து மதமே கிடையாது.. வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் அது.. அவரே சொல்லிட்டார்.. இப்போ என்ன பண்ண போறீங்க?

அவரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு மேல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு, உலக நாயகன் கமலஹாசன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.