பிரபல தொகுப்பாளினி டிடி கேட்டதற்காக நடிகர் விக்ரம் நொடியில் செய்த காரியம்!!

பிரபல தொகுப்பாளினி டிடி கேட்டதற்காக நடிகர் விக்ரம் நொடியில் செய்த காரியம்!!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய ‘COFFEE WITH DD' நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் டிடி - யாகாவே பதிந்துவிட்டார். அதற்கு பிறகு இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கொரோனா காலத்திற்கு பிறகு டிடி தொடர்ந்து எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இல்லை. 

இதனையடுத்து சமீபத்தில்  RRR படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கி இருந்தார். அந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் செமயாக ரீச் ஆனது. 

இந்நிலையில் தற்போது விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான மகான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதில் விக்ரம், துருவ், பாபி சிம்ஹா என பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம்  பேட்டி எடுத்த டிடி, விக்ரமிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

உடனே, அவர் தொகுப்பாளினி டிடி உடைக்கு தகுந்தவாறு ஷேர்ட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். இந்த நிகழ்வை டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இவர் தான் விக்ரம் என அவரை புகழ்ந்து பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Dhibba